அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக வளங்கக்கோரி JVP ஆர்ப்பாட்டம்.


எப்.முபாரக் -

னைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக பெற்றுக் கொடு என அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இன்று (18) இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

மாணவர்களின் கல்விக்காக இலத்திரனியல் ஊடகங்களில் வழங்கப்படும் சந்தர்ப்பங்களை அதிகரி, அனைத்து மாணவர்களுக்கும் இணையக்கல்வியினை இலவசமாய் பெற்றுக் கொடு,
பிள்ளைகளின் கல்வி முடக்கம் உடனே தீர்வைப் பெற்றுக் கொடு போன்ற பதாதைகளை ஏந்தியவாறு சமூக இடைவெளியைப்பேணி
40-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா இலங்கையில் கல்விக்காக 6 வீதம் மொத்த தேசிய உற்பத்தியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆனாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.எனினும் இந்த நிலைமை இன்னும் மோசமாக விரிவடைந்திருக்கிறது காரணம் கொரோனா தொற்று நோயின் பின்னர் பாடசாலைகள் முடக்கப்பட்டு இருப்பதன் காரணமாகவும் சில இடங்களில் இணைய வசதிகள் இல்லாமையினாலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அனைவருக்கும் இலவசமாக இணைய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :