காரைதீவில் அதிகாலை திருவெம்பாவை பூஜை!

வி.ரி.சகாதேவராஜா-

ந்துக்களின் மார்கழி திருவெம்பாவை பூஜை நாட்டில் இந்துக்கள் வாழ்கின்ற சகல பிரதேச ஆலயங்களிலும் அதிகாலையில் நடைபெற்றுவருகிறது.

கொரோனா காலம் என்பதால் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலங்களைத் தவிர்த்து ஆலயங்களில் மாத்திரம் சுகாதாரவழிகாட்டலுக்கமைவாக விசேட திருவெம்பாவை பூஜை நடைபெற்றுவருகின்றது.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலும் அதிகாலை திருவெம்பாவை பூஜை நடைபெற்றுவருகிறது.
அங்கு மணிவாசகப்பெருமானின் திருவுருச் சிலை ஆலயப்பிரகாரத்தில் ஊர்வலமாக தூக்கிச்செல்லப்பட்டு பூஜை நடைபெற்றது.

நடராசப்பெருமானுக்கு விசேட திருவெம்பாவை பூஜையை ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் நடாத்தினார்.

சுகாதாரமுறைப்படி பக்தர்கள் பங்கேற்றனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி திருவாதிரையுடன் இத்திருவெம்பாவை நிறைவுக்குவருகிறது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :