அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டம் தம்பலகமம் பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட பகுதிகளில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரவு(19) பெய்த அடை மழை காரணமாக வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் வீடுகள்,வயல் நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் முள்ளிப் பொத்தானை நான்காம் வாய்க்கால் உட்பட பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் வீடுகள் குடியிருப்பு பகுதிகள் என்பன மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்துக்கு தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி வெள்ள பிரதேசத்துக்கு சென்று அங்கிருக்கும் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் நீர் வடிந்தோடக்கூடிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.
இதில் பிரதேச சபை உறுப்பினர்களான ஆர்.றஜீன், தன்சூர் அலி ஆகியோரும் களத்தில் நின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :