ஊரடங்கு வேளையிலே (கவிதை)
ஊரடங்கு வேளையிலே 
+++++++
Mohamed Nizous

திறந்தும் திறவாத பாதிக் கதவாலே செய்வார் யாவாரமே -மெயின்
கடைகள் வெறிச்சோட இடையில் உள் ரோட்டில் விற்பார் விலை கூட்டியே

அதிகம் பொருள் வாங்கி பிரிஜ்ஜில் இடமின்றி அவித்தும் வைப்பாரடி -இங்கு
எதுவும் இல்லாதார் எங்கே செல்வார்கள்
இறைவன் காப்பானடி

ஐந்து நாளைக்கு அடங்கி இருக்கோனும்
அலுப்புக் கொள்வாரடி -பலர்
போணில் ரீலோடு போட்டு நிறைக்கின்றார்
பொழுது போக்கோணுமாம்
பொழுது போக்கோணுமாம்

தினமும் கூலிக்கு சென்று உழைப்போர்கள்
திகைத்துப் போனாரடி- பிள்ளை
இரைப்பை ரீலோடு கேட்கும் அதன் போது
ரப்பை நம்பி நிற்பார்.

அயலில் வசிப்போர்க்கும் அவதி நிலை கண்டு நல்லோர் கொடுப்பாரடி -சிலர்
அவுடி இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு
தவிடும் கொடுக்காரடி
தவிடும் கொடுக்காரடி

இறைவன் இருக்கின்றான் எல்லோர் மனதுக்கும் இதுவே அமைதி தரும்
நிறைய உள்ளோர்கள் நிலையை புரிந்திங்கு
கொடுத்தால் அருள்வான் இறை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :