இக்கட்டான சூழ்நிலைகளில் சேவையாற்றிய கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னிக்கு பாராட்டு !

நூருல் ஹுதா உமர்,சர்ஜுன் லாபீர்-

ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த சேவையாளர்களை ஊக்கப்படுத்தும் விருதுகள் வழங்கும் விழாவில் இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறுபட்ட சுகாதார நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதுடன் சிறந்த பொதுச்சுகாதார சேவையினை மக்களுக்கு செய்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னிக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணணினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இங்கு உரை நிகழ்த்திய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன், கல்முனைப் பிரதேசத்திற்கு இப்படியான ஒரு வைத்தியர் கடமையில் இருப்பது எமக்கு மிகவும் திருப்தியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் அதே வேளை இப்பிரதேச மக்களுக்கு அவரின் சேவை அருட்கொடையாகும் அதேவேளை அவரது சகல சேவைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பாட்டால் எமது பிரதேசத்திற்கு வெற்றி நிச்சயம் அமையும் என்றார். 

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :