இதனடிப்படையில் வன்னி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு வாழ்விடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பலர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலையறிந்து மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பாதிப்புக்குள்ளாகி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழும் மக்களின் நிலைமையை அறிய அப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் பணிப்புரையின் கீழ் குழுவொன்று விஜயம் செய்துள்ளது.
இதன் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசியமான உடனடி தேவைகள் சம்பந்தமாகவும் அவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உடனடி நிவாரண திட்டங்களை வழங்கவும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர அறிவித்தலொன்றையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment