இந்த அரசாங்கத்தின் மீது இத்தனை காலமாக நான் வைத்திருந்த நம்பிக்கையை நான் முற்றாக இழந்து விட்டேன் : பெஸ்டர் றியாஸ்.


-
அபு ஹின்ஸா
கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டால் எரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும், ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று இன்று (20) கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.றியாஸின் ஏற்பாட்டில் ஐக்கிய சதுக்க முன்றலில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், இன்று இந்த நாட்டிலே கொரோனா வைரஸினால் ஏற்படும் மரணத்தினால் எமது முஸ்லிம் ஜனாஸாக்களையும் பலாத்காரமாக எரித்து இந்த அரசாங்கத்தின் மீது இத்தனை காலமாக தனிப்பட்ட முறையில் நான் வைத்திருந்த நம்பிக்கையை நான் முற்றாக இழந்து விட்டேன். இனிமேலாவது இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் மீது இழைக்கின்ற பிழையான நடைமுறைகளை நிறுத்தி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, எமது கல்முனைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் பெண்கள் எல்லோரும் இந்த அநியாய எரிப்புக்கு எதிராக இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் அதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எம்.றியாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால பொருளாளர் வபா பாறூக் உட்பட கல்முனை பிரதேச இளைஞர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :