அக்கரைப்பற்றில் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் சமூக மட்ட குழுக்களுடனான கலந்துரையாடல்நூருல் ஹுதா உமர்-
னாதிபதி கோத்தபாயவின் யோசனையில் உருவான அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு 2021-2023 திட்டத்தின் கீழ் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான "கிராமத்தின் ஊடான கலந்துரையாடல் மூலம் கிராமத்திற்கு திரும்புதல்" எனும் அடிப்படையிலான சமூக மட்ட குழுக்களுடனான கலந்துரையாடலும் வேலைத் திட்டங்களை அடையாளம் காண்பதற்குமான கூட்டம் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு 02 மற்றும் 01 ஆம் பிரிவுகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரஸ்.எச்.தம்ஜீத் கே.எல் ஹனூசா ஆகியோரின் தலைமையில் அக்கரைப்பற்று பாயிஷா வித்தியாலய கேட்போர் கூடத்தில்கடந்த செவ்வாய்க்கிழமை (29) மாலை இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் விசேட பங்குபற்றுனராக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் குறித்த வட்டாரங்களுக்கு பொறுப்பான உறுப்பினர்களும் குறித்த பிரிவுகளின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடன், பிரிவின் பயிலுனர் உத்தியோகத்ர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த பிரிவுகளில் 2021 ல் அமுல்படுத்த உத்தேசிக்கும் திட்ட முன்மொழிவுகள், 3 ஆண்டு திட்டம் தயாரித்தல், கிராமிய மட்ட குழுக்கள் அமைத்தல் என்பனவும் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :