கல்விப் பணிக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் பங்களிப்பு.

எச்.எம்.எம்.பர்ஸான்-

.பொ.த.சாதாரண தர மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்வி அபிவிருத்தி சபை பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைகளின் உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்புடன் கல்வி அபிவிருத்தி சபையினர் செயலட்டைகளை தயாரித்து பாடசாலை அதிபர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த செயலட்டைகளை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) ம் திகதி கல்வி அபிவிருத்தி சபையின் தலைவரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.டி.கான், எம்.பீ.எம்.சித்தீக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த செயலட்டைகளை தயாரித்து வழங்க நிதிப் பங்களிப்பு செய்த கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.அமீர், எஸ்.ஏ.அன்வர், எம்.ரீ.எம்.அன்வர் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ.கபூர், ஐ.எம்.இம்தியாஸ், எம்.பீ. தையூப் ஆகியோர்களுக்கு கல்வி அபிவிருத்தி சபையினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :