கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் இன்று வரை 846 பேர் அடையாளம்

எப்.முபாரக்-

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் இன்று வரை 846 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் இன்று(23) தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் பல இடங்களில் 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை நகரப் பகுதியில் 43 நபர்களும்,
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 7 நபர்களும்,
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 12 பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 14 நபர்களும்
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 1 நபரும்,
சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் 1 நபரும்,
கோமறங்கட வெல செயலாளர் பிரிவில் 1 நபரும்
மொத்தமாக 67 நபர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கும், கொரோனா தடுப்பு தேசிய பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தில் முருகாபுரி, துளசிபுரம், அபேபுர ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி சி ஆர் பரிசோதனைகள் சுகாதாரப் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் மட்டக்களப்பு மத்தி, அக்கரைப்பற்று பிரதேசங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று கொத்தணியை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை தவிர்த்து பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :