காலியில் 5 பகுதிகள் மற்றும் நோட்டன் ப்ரிஜ் LOCKDOWN

M.I.M.இர்ஷாத்-

கொரோனா அச்சம் காரணமாக காலி மாவட்டத்தில் 5 பிரதேசங்கள் நேற்று மாலை தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி மக்குலுவ, தேதுன்னுகொடை வடக்கு, மிலித்தேவ, எத்திலிகொட தெற்கு மற்றும் தலாப்பிடிய ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்,நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஹத்துடன், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தண்டுகலா தோட்டத்தில் ஏற்கனவே ஐந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 16 பேருக்கு வைரஸ்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களை கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கு சுகாதார அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தொழில்செய்த நிலையில் ஊர் திரும்பியவர்கள்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :