நோர்வூட் வெஞ்சர் அப்பலோரன்ஸ் தோட்டத்தில் 170 பேருக்கு பி.சி.ஆர்.


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

நோர்வுட் வெஞ்சர் அப்பலோரன்ஸ் தோட்டப்பகுதியில்
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 170 பேருக்கு 22.12.2020. செவ்வாய்கிழமை இரவு
பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இந்த பி.சி.ஆர் பரிசோதனை
பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளபட்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது
சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில்
பணி புரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று உருதி செய்யப்பட்டதை
தொடர்ந்து ஆசிரியையோடு தொடர்பினை பேணி வந்த குறித்த பாடசாலையில் தரம் 09 இல்
கல்வி பயின்று வந்த ஒரு மாணவனுக்கும் , ஒரு மாணவிக்கும் கடந்த 12.12.2020 தொற்று உறுதி செய்யபட்டது

இதேவேளை குறித்த மாணவர்களோடு தொடர்பினை பேணி வந்தவர்கள் என்றவகையிலே
170 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டமை குறிப்பிடதக்கது

முதலாவது தொற்றாளரான குறித்த ஆசிரியைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் 21 நாட்கள் முடப்பட்டிருந்த நிலைையில்
21.12.2020 திங்கள் கிழமை முதல் மீண்டும்
திறக்கப்பட்டமை குறிப்பிடத்தகத்து

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :