J.f.காமிலா பேகம்-
அண்மையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திருத்தப்பட்ட முல்லேரியா வைத்தியசாலையிலுள்ள பிரதான பி.சி.ஆர் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இன்று இரவுக்குள் அந்த இயந்திரத்தை மீள இயங்கக்கூடிய வகையில் திருத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை அண்மையில் கோளாறு ஏற்பட்டு செயலிழந்த குறித்த பி.சி.ஆர் இயந்திரம் சீனாவில் இருந்து வந்த குழு திருத்தியதை அடுத்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment