வேகமாக முன்னேறும் இனவாதமும் பின் தங்கும் தேசமும்.

னவாதம் நுழைந்து விட்டால் அந்த இடத்தில் முதலில் அமைதி மறைந்து விடும். அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நிம்மதி இல்லாமல் போய்விடும். அந்த இடமே ஒரு சூனிய பூமியாக காட்சி தரும். அங்கு ஒரு மயான அமைதி மறைந்து இருக்கும். இந்தியாவின் RSS சிந்தனை இங்கு நுழைந்து இலங்கையும் ஒரு இனவாத தேசமாக உருமாறி விட்டது வேதனை அளிக்கிறது.

பல நூற்றாண்டுகளாக இங்கு இனவாதம் இருந்தது. அது, ஆட்சியாளர்களாலும் மக்கள் ஒற்றுமையாளும் வெளிப்படாது உள்ளுக்குள் எரிந்து கொண்டு இருந்தது. உள்ளுக்குள் எரிந்து கொண்டு இருந்த இனவாதம் வெளி வந்து கொழுந்துவிட்டு எரியும் அளவுக்கு வந்தமைக்கு நமது அரசியலும் ஒரு காரணம் என்பதை மறந்து விட வேண்டாம்.

சுதந்திரம் அடைந்த போது தமிழர் தமக்கான ஒரு கட்சியை உருவாக்கினார்கள். முஸ்லிம்கள் தேசிய சிங்கள கட்சிகளுடன் இணைந்து பயணித்தார்கள். 35 ஆண்டுகளுக்கு பின்னர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சியை ஆரம்பித்தார். 1982 அதில் ஹிஸ்புல்லா வந்தார். வந்தவர் அவர் பிரதேசத்தை மட்டுமே! இஸ்லாமிய அடையாளங்களோடு அபிவிருத்தி செய்தார். அந்த நேரம் மிகவும் வேகமாக முன்னோக்கி நகர்ந்தது முஸ்லிம்களின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றம். இதை உணர்ந்த பேரினவாத சிந்தனை கொண்ட தலைவர்கள் இணைந்து அஷ்ரப் அவர்களின் மறைவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். அதை அவர்கள் சிறந்த முறையில் சிந்தனை செய்து நகர்த்தினார்கள்.

அதாவது, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஆதிக்க போட்டியை உண்டு படுத்தினார்கள். இதனால் முதலில் ரிஷாத் அவர்கள் வெளியே வந்து தனி கட்சி. அதை தொடர்ந்து அதாவுல்லா வெளியே வந்து தனி கட்சி என ஒன்றாக இருந்த முஸ்லிம் கட்சியை பல கூறுகளாக உடைத்து வலுவான முஸ்லிம்களின் அரசியலை சிதைத்தது பேரினவாதம் இதில் வெற்றியும் அடைந்தது.

மேலும், அஷ்ரப் அவர்கள் கட்டிக் காத்த பேரம் பேசும் முஸ்லிம்களின் அரசியல் துண்டு துண்டாக நொறுங்கிப் போனது. அதை தொடர்ந்து முஸ்லிம் மக்களின் தொன்று தொட்டு வந்த பொருளாதாரமும் சிதைக்கப்பட்டது. முதலில் சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில் மாணிக்கக்கல் வியாபாரம் முஸ்லிம்கள் கையில் இருந்து பறிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகமும் இரும்பு கரம் கொண்டு நசுக்கப்பட்டது. பெட்டா, குருநாகல், கண்டி, மாத்தளை போன்ற நகரங்களில் ஓங்கி இருந்த முஸ்லிம்களின் கட்டங்கள் வியாபாரங்கள் சூறையாடப்பட்டு உயிர் தப்பினால் போதும் என்று கையில் கிடைத்த காசுக்கு கட்டங்களை விற்று முஸ்லிம்களை இடம்பெயர வைத்தது.

இது இவ்வாறு நடந்து கொண்டு இருக்கையில் RSS சிந்தனைகள்
நுழைந்து முஸ்லிம்களின் கடைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் என தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது என்றும், தொப்பி, ஹபாயா, ஹலால், மார்க்க கல்வி என அனைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து தற்போது கொரோனாவினால் மரணித்த முஸ்லிம் உடல்களை தங்கள் மார்க்க கொள்கைக்கு எதிராக தீயிட்டு கொளுத்தி அதில் ஒரு ஆனந்தம் அடைகிறது இன வாதம். 

 மறு புறம் இஸ்ரேலிய சிந்தனைகள் இணைந்து வரலாற்று தரவுகளை பொய்யாகப் புனைந்து எழுதி முஸ்லிம் சமூகத்தை வந்தேறி குடிகளாக காட்டியது.

இந்த நிலை விஸ்வரூபம் எடுக்க காரணம். முஸ்லிம் தலைமைகள் என்றால் அது மிகையாகாது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான கல்வி, பொருளாதாரம், குடியேற்றம், அபிவிருத்தி என்பவைகளை கையாள ஒரு கட்சி முஸ்லிம்களுக்கு தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அதில் சுயநலம் இருக்க கூடாது. தனிப்பட்ட சிந்தனைகளை கருத்துகளை சமூகத்தில் திணிப்பு செய்யவும் முடியாது. 

மக்களுக்காக கட்சி மக்களுக்காக தலைமை என இருக்க வேண்டும். 

குடும்ப ஆதிக்கம். கட்சி ஆதிக்கம். பிரதேச ஆதிக்கம். அதிகார ஆதிக்கம் என்று இருக்கக்கூடாது. ஆனால், இங்கு நடப்பது வேறு, முஸ்லிம் தலைவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக மக்களை தங்கள் தங்கள் கட்சி சார்பில் பிரித்து பிரதேச வாதம், இனவாதம், கட்சி வாதம் என இலங்கையில் ஒற்றுமையாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள்களை எட்டு திசைகளிலும் துண்டாக்கி செல்லாக்காசாகி விட்டார்கள்.

மேலும், ஒரு நாட்டில் மூன்றாவது பெரும்பான்மையாக வாழும் ஒரு சிறிய தொகையினருக்கு எதற்கு பத்து அரசியல் கட்சிகள்? இங்கு எல்லோரும் தலைவராக வரவேண்டும் என்ற ஆசை. அதனால், ஆளாளுக்கு ஒரு கட்சி என்று தொடங்கி ஒரு கேவலம் கெட்ட அரசியல் அனாதைகள் போல் இலங்கை முஸ்லிம்களை இனம் காட்டி விட்டது இந்த கட்சிகளும் தலைமைகளும்.

இந்த கட்சிகளை வைத்து தலைவர்கள் பேரம் பேசி அமைச்சராக வந்து முழு நாட்டுக்கும் அனைத்து இனத்திற்கும் உரித்தான பதவியை தனது ஊரையும் தனது இனத்தையும் நோக்கி நகர்த்தி அதில் தன்னையும் தனது கட்சியையும் வளர்த்து கொண்டார்கள். 

இதை நன்கு உணர்ந்த இனவாத சிந்தனையின் இருந்த அரசியல் வாதிகள். அதை பெரும்பான்மை மக்களிடம் தெளிவாக எடுத்துக் காட்டி சிங்கள மக்களை சிந்திக்க வைத்தார்கள். அந்த நிந்தனையில் பிறந்த மாற்றமே இன்று இனவாதம் முஸ்லிம்களுக்கு எதிராக திசை திரும்பி வர காரணமாக அமைந்தது.

மேலும், இத்தனை சதிகளும் இந்தியா முஸ்லிம்கள் மத்தியில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது அதை சுயநல அரசியலுக்கு அப்பால் நின்று இந்தியா முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தடுத்து வெற்றி காணுகிறார்கள். அதை ஏன்? இலங்கை முஸ்லிமாகிய நாங்கள் சிந்தித்து செயல் படுத்த முடியாதா?

ஆகவே, இனி இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுயநலமாக இருக்கும் கட்சிகளையும் தலைமைகளையும் நம்பி ஏமாற முடியாது. முஸ்லிம் தலைமைகளால் எமது உரிமைகள் பாதுகாக்கப்படவும் இல்லை. இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் முடியவில்லை. அதேபோல், இனிவரும் காலங்களில் தேசிய கட்சிகள் எதுவாக இருந்தாலும் இனவாதத்தை முன் நிறுத்தியே அரசியல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் . இனிமேல் இனவாதம் இந்த நாட்டில் இருந்து அகல பல தலைமுறைகள் கடக்க வேண்டும்.

எனவே, இருக்கும் தலைமுறைகளாவது நிம்மதியாக வாழ மத நல்லிணக்கம் வேண்டும். அதை அரசியலுக்கு அப்பால் நின்று சிங்கள மக்களுக்கு சிறந்த முறையில் தெளிவு படுத்தி எடுத்து சொல்ல வேண்டும். அதன் மூலம் சில விட்டுக்கொடுப்புகளை செய்து ஒரு தூய்மையான சமூகத்தை கட்டியெழுப்பி எதிர்கால இலங்கையை வளமான ஒரு நாடாக கட்டியெழுப்புவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :