மாளிகைக்காடு அந் - நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு முஸ்லிம் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் பெட் வழங்கிவைப்பு



பாறுக் ஷிஹான்-

மாளிகைக்காடு மக்களின் நன்மை கருதி அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் கல்முனை மாநகர பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்ஸூரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பினால் (YMWA ) மாளிகைக்காடு அந் - நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கான முஸ்லிம் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் பெட் இன்று(13) மாலை ஜும்மா தொழுகையை தொடர்ந்து அந் - நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகளிடம்உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

ஐயாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் முஸ்லிம் மையவாடியான மாளிகைக்காடு அந் - நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடிக்கு இதுவரை இல்லாது இருந்த இந்த குறையை நிவர்த்தி செய்யவேண்டும் என அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா முன்வைத்திருந்த கோரிக்கையை துரிதகெதியில் நிவர்த்திசெய்து தந்த சகலருக்கும் இவ்வேளையில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தனது உரையில் தெரிவித்தார். மேலும் கோவிட் - 19 பாதிப்புக்குள்ளான முஸ்லிங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது வேதனையளிப்பதாகவும் விரைவில் இந்த அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்க எல்லா முஸ்லிங்களும் இறைவனை பிராத்திக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்ஸூரின் பிரத்தியோக செயலாளர் முகம்மது ஸப்ராஸ், எம்.சி. ஷம்ஸுல் முனா, அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் உப தலைவர் பீ.எம்.நாஸிக், அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாளிகைக்காடு அந் - நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் போஷகர் பௌசர் ஹாஜி உட்பட நிர்வாகிகள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் மாளிகைக்காடு அந் - நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஸப்ராஸ் ஷஃதி துஆ பிராத்தனை நிகழ்த்தினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :