இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (25.11.2020) காலை 5.40 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது,
ஊடகவியலாளர் காலிதீன் கல்முனை மாநகர சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றுகின்றார். இவர் கல்முனை மாநகர சபைக்கு கடமைக்காக புதன்கிழமை காலை சென்று கொண்டிருக்கும் போது கோழிகளை ஏற்றிக் கொண்டு வந்த வாகனமொன்று மிகவும் வேகமாக வந்து காலிதீனில் மோதியுள்ளது. மோதுண்டதும் வாகனத்தினை நிறுத்தாது சென்றுள்ளார். இந்த விபத்து சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் சொப்பிங் சென்றர் சந்தியில் நடைபெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த காலிதீன் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதே வேளை, நெஞ்சில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இவ்விபத்துப் பற்றி கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், பொலிஸார் விபத்து நடந்தது பற்றிய விபரங்களை கேட்டறிந்து கொள்ளவில்லை என்றும், போக்குவரத்துப் பொலிஸார் வருகை தந்து விபத்து நடந்த இடத்தினை மாத்திரம் கேட்டுச் சென்றதாகவும் ஊடகவியலாளர் காலிதீன் கவலை தெரிவித்தார்.

0 comments :
Post a Comment