கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று


தலவாக்கலை பி.கேதீஸ்-

கொட்டக்கலை பிரதேச சபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டக்கலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

 குறித்த இளைஞர் கொழும்பு கிரிபத்கொடை பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு கடந்த 16ம் திகதி வந்துள்ளார்.

 கொழும்பிலிருந்து வந்தவர் என்ற அடிப்படையில் இவருக்கு 26ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

இதனையடுத்து இவருடன் நெருங்கி பழகியவர்களின் 14 குடும்பங்கள் சுயதனிமைக்கு உட்படுத்தபடவுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த இளைஞனை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு வந்து தத்தமது வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பவர்கள் அப்பகுதி பொலிஸாருக்கும் பொது சுகாதார அதிகாரிகளுக்கும் உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் இருமல்,காய்ச்சல் இருப்பின் உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கும்படி கொட்டக்கலை பிரதேசத் தலைவர் ராஜமணி பிரசாந் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :