பேஸ்புக் பயனாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்.

J.f.காமிலா பேகம்-

லங்கை பேஸ்புக் பயனாளர்களின் தனிநபர் தரவுக்காப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை காவல் துறையினரால் கூட இலகுவாக அணுக முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளைக் கோரும் சட்டத் துறையினர் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பாதுகாப்பு கொள்கைக்கான தலைவர் Amber Hawkes இதனை கூறியுள்ளார்.

அடிப்படை பயனர் தரவு என அழைக்கப்படும் மிகவும் அடிப்படை மட்டத்திலான தரவுகளே தம்மிடம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயனர்கள் எவரேனும் உள்ளூர் சட்டங்களை மீறியிருந்தால் அது தொடர்பிலான கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறான கோரிக்கைகளை உள்ளூர் சட்டங்கள் குறித்து தெளிவுடைய தமது நிபுணர் குழு பரிசீலித்து தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :