இப்பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோற்கடிப்பதன் தவிசாளர் பதவியில் இருந்து இவரை தூக்கி எறிவதற்கு எடுக்கப்பட்ட பகீரத முயற்சி கடைசி நேரத்தில் தோல்வியில் முடிந்தது.
மட்டும் அல்லாமல் வரவு - செலவு திட்டத்தை தோற்படிப்பதன் மூலம் இவரை தூக்கி எறிவதற்கு கங்கணம் கட்டி கொண்டிருந்த உறுப்பினர் அடங்கலாக சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக அதை ஆதரித்த அதிசயமும் நடந்தது.
இது குறித்து தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை நேற்று ஞாயிற்றுக்கிழமை நாம் வினவியபோது இவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு
எனது கட்சி தலைமை மீதும், எனது மக்கள் மீதும், ஆண்டவன் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவன் நான். அதே போல எமது பிரதேச சபையின் மக்கள் நலன் கொண்ட உறுப்பினர்களையும் உரிய மதிப்புடன் நடத்துபவன்.
ஆகவேதான் கடைசி நேரத்தில் நன்மை வென்றது. பொறாமை தோற்றது. யார் உண்மை? யார் பொம்மை என்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
நான் பதவியை கட்டி பிடித்து கொண்டு இருப்பதற்கு அரசியலுக்கு வந்தவன் அல்லன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தல் கேட்டு வென்றவன்.
எனது வியூகம், தனிப்பட்ட செல்வாக்கு ஆகியன உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் காரைதீவு பிரதேச சபையை தமிழரசு கட்சி கைப்பற்றுவதற்கு காத்திரமான வழங்கி இருந்தன. போட்டியிட்ட அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி வாகை சூட முடிந்தது.
என்னை எனது மக்கள் தவறாக கண்டு பதவி விலக கோருவார்களாக இருந்தால் எந்த நேரமும் விட்டு ஒதுங்குவதற்கு நான் இப்போதும் தயாராகவே உள்ளேன். அதே நேரத்தில் பனம் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதை பொறாமை பிடித்தவர்களுக்கு படிப்பித்து காட்டி உள்ளேன்.
எனக்கு மீண்டும் கிடைத்து உள்ள வெற்றி காரைதீவு மண்ணின் மகத்துவத்துக்கு இன்னமும் மேன்மை சேர்த்து உள்ளது. காரைதீவு பிரதேச சபை கிழக்கு மாகாணத்தில் உள்ள சபைகள் அனைத்துக்கும் முன்மாதிரியாக வெகுசிறப்பாக இயங்கி வருகின்றது. எனது பதவி காலத்தில் காரைதீவு மண்ணை, காரைதீவு மக்களின் வாழ்வியலை அனைத்து துறைகளிலும் முன்னேற்றி தன்னிறைவு அடைய செய்ய வேண்டும் என்பதில் நான் பற்றுறுதியுடன் இருக்கின்றேன்.
0 comments :
Post a Comment