சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்



ஐ.எல். நாஸிம் -
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவனையடுத்து, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து மனித நேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை- ஶ்ரீ லங்கா, அனுசரணையுடன் மாபெரும் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் “கொரோனா வைரஸிடமிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று(25) இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது சுகாதார நடைமுறைகளை தினமும் பின்பற்றி நடக்குமாறு ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுமும் விநியோகிக்கப்பட்டன.
இதில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர், மனித நேய நற்பணிப் பேரவை சம்மாந்துறையின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர், பொதுச் சுகாதார அதிகாரிகள், மனித நேய நற்பணிப் பேரவையின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :