M.I.M.இர்ஷாத்-
ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் அவர்களை ஏற்றி தனிமைப்படுத்தல் முகாமை நோக்கிச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஓமோன் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 254 பேர் நாடு திரும்பியிருந்தனர்.
இவர்களில் 25 பேர் 11 பஸ் வண்டிகளில் யாழ்ப்பாணத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பச்சிலைப்பள்ளி அரசர் கேணி பகுதியில் விபத்தில் சிக்கினர்.
இவர்களில் 17 பேர் பளை வைத்தியசாலையிலும், மூவர் யாழ் போதன வைத்தியசாலையிலம் அனுமதிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment