கொரோனா ஏற்பட்ட பெண் தொழில் செய்யும் இடத்தில் பலருக்கு சுகயீனம்? பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்றுள்ளனர்!

J.f.காமிலா பேகம்-

ம்பஹா மினுவங்கொட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய் பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் பலரும் அண்மையில் சுகயீன விடுமுறை கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

39 வயதுடைய கொரோனா தொற்றுக்கு இலக்காகிய பெண், அந்த தொழிற்சாலையில் ஊழியர்களின் செயற்திறனை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்பபெண்ணின் பிள்ளைகள் இருவரும் வெவ்வேறு பாடசாலைக்கு சென்றுள்ளதால், மினுவாங்கொடை வலயகல்விப்பணிப்பாளர் இப்பாடசாலைகளின் மாணவர்களை பரிசோதனைக்கு உற்படுத்த நடடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக தெரிவித்தார்.

கம்பஹா வைத்தியசாலையில் , கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக கடமையாற்றிய ஊழியர்கள் 15 பேரும் தனிமைடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :