J.f.காமிலா பேகம் -
சிலாபம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இளைஞர் ஒருவருக்கும், இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
குறித்த நபர் இன்று காலை நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு மருந்து பெறச் சென்றுள்ளார்.
இச் சந்தர்ப்பத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியாகியது.
தொடர்ந்து 30 வயதுடைய குறித்த நபர் பணிசெய்த சிலாபம் – அம்பகந்தவில பிரதேசத்திலுள்ள மதஸ்தலம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு வருவதோடு அங்கு எவ்வாறு கொரோனா தொற்று வந்தது என்கிற விசாரணையும் ஆரம்பமாகியிருக்கின்றது.
0 comments :
Post a Comment