சஜித் அணியிலிருந்து முசரப் உள்ளிட்ட 09 பேர் நீக்கம்-சபாநாயகருக்கும் அதிரடி கடிதம்M.I.இர்ஷாத்-
20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த 09 உறுப்பினர்களுக்கு எதிர்கட்சியில் அல்லாமல் ஆளுங்கட்சியில் அமர்ந்து கொள்வதற்கான ஆசனங்களையும் தயார்செய்யும்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தவ்பிக் ஆகிய 04 உறுப்பினர்கள் 20ஆவது திருத்த யோசனைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள்.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான இஸாக் ரஹ்மான், முசரப் மற்றும் ரஹீம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயனா கமகே ஆகியோரே இவ்வாறு கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று சபாநாயகருக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :