கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக பி.ரி.ஆர் பரிசோதனையை செய்து அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான வசதி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விசேட ஆய்வுக் கூடமொன்று விமான நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
இதில் பி.சி.ஆர். பரிசோதனையை செய்யும் இரண்டு கருவிகளும், தன்னியக்க சேவையை வழங்கும் இரண்டு கருவிகளும், பாதுகாப்பு அறைகள் மூன்றும் உள்ளன.
தினமும் 500 பயணிகளுக்கு இதில் சேவையை பெற்றுக்கொள்ளவும் முடியும்.
வெளியிடங்களிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை செய்யவும் அதன் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் 6000 ரூபா முதல் கட்டணங்கள் அறவிடப்படுவதோடு 6 மணித்தியாலமும் செலவுசெய்ய நேரிடுகின்றது.
எனினும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கூடத்தில் வெறும் இரண்டே மணிநேரத்தில் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவும் அறிக்கையூடாக வழங்கப்படுவதோடு முற்றிலும் இலவசமாகவே இச்சேவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.