கொழும்பு - மாதம்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்துக்களை
வெளியிட்டார்.
குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்
எங்களுடைய நாடு பொருளாதார அடிப்படையிலும், ஏனைய துறைகளிலும் பாரியளவில் பின்னோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் இலங்கையின் செயல்திறனை அதிகரிக்கக் கூடிய வகையில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டிய
சூழ்நிலையில் இருக்கின்றோம்.
எமது நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்று எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்கே விருப்பம்
கொண்டுள்ளோம்.
இந்த சந்தர்பத்தில்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஒரு சரியான
தலைமைத்துவத்தை பொறுப்பேற்றிருக்கின்றார்.
எனவே, அனைத்து இன மக்களும் ஒரு குடையின் கீழ் வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக ஒரு வலுவான மக்கள் சக்தி உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் ஐக்கிய மக்கள் சக்தியை அவர் ஸ்தாபித்திருக்கின்றார்.
எனவேதான் எமது தாய்நாட்டை பாதுகாப்பதற்காகத்தான் நாம் ஒன்று கூடியிருக்கிறோம்.
இந்த நாடு மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ பிரிந்து போகாமல் கட்டமைக்கப்படுவதற்காகவே ஐக்கிய மக்கள்
சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் போன்றோர் கூட்டு தலைமைத்துவத்தில் மக்கள் சக்தியோடு இணைந்திருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியையும், சஜித் பிரேமதாசவையும் பலப்படுத்துவதற்கு நாங்கள்
தீர்மானித்திருக்கின்றோம். இந்த தீர்மானத்தில் எந்த பிழைகளையும் அடையாளம் காண முடியாது.
ஆனால் ஒரு சிலர் மத அடிப்படையில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு இந்த நாட்டை
சின்னாபின்னமாக்க முயற்சிக்கின்றனர்.
1950 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் ஐந்து மகா சக்திகளை
வைத்துக் கொண்டு பண்டாரநாயக்க அவர்களை பிரதமர் ஆசனத்தில் அமர்த்துவோம் என்று போராடினார்கள்.
ஆனால், அதற்கு பின்னரான காலப்பகுதியில் நாங்கள் அனைவரும் 30 வருட கால யுத்தம் காரணமாக திண்டாடிக்
கொண்டிருந்தோம்.
அந்த வகையில் மீண்டும் அதேபோன்றதொரு நிலைமையை உருவாக்குவதற்கு ஓர் அணியினர் முயற்சித்து
வருகின்றார்கள்.
அதேநேரம் மறுபுறத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்
மக்களை ஒன்றிணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த எதிர்பார்ப்புமிக்க முயற்சியை நாங்கள் கைவிட்டுவிட கூடாது. எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி என்பது
எங்களுடைய நாட்டினதும், எதிர்கால சந்ததியினரினதும் தலையெழுத்தை தீர்மானிக்கக்கூடிய நாளாகும்.
அத்துடன் எதிர்வரும் ஐந்து வருடத்தை பற்றி சிந்திக்காது போனால் இந்த நாடு பின்னோக்கிச் செல்லக் கூடிய
சூழ்நிலை உருவாகும்.
இன்று இலங்கைக்கான உதவித் திட்டங்கள்,கடன் வசதிகள் ஆகியன அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இருந்து எங்களுக்கு கிடைப்பது குறைவாக காணப்படுகிறது. ஆனால் மறுபுறம் சீனா எங்கள் நாட்டை ஆக்கிரமிக்கிறது.
எனவே, இலங்கையை பாதுகாத்து வலுவான மக்கள் சக்தியால் அதனை கட்டமைப்பதற்கு நாங்கள் இந்த தருணத்தில் கூட்டாக முயற்சிக்க வேண்டும்." என்றும் கலாநிதி வி.ஜனகன் மக்கள் சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தார்.