களுத்துறை மாவட்டத்தில் ஐ.தே.கவின் பிரதான வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பாலித்த தெவரப்பெருமவின், இறந்துபோன மகனின் நினைவாக அவர்களது கலாசார முறைப்படி தானம் வழங்கும் நிகழ்வை குறிக்கும் பதாகையை அகற்றிய மத்துகம பொலிசார் அவரது மனைவியைத் தள்ளித்தாக்கியுள்ளதுடன் தகாத வார்த்தைகளினாலும் தூற்றியுள்ளனர். இதனால் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மன உளைச்சல் காரணமாக தமது அரசியல் பணிகளில் இருந்து விலகி இருக்கப்போவதாக பாலித்த தெவரபெரும அறிவித்துள்ளார்.
தன்னலம் பாரா மக்கள் சேவகனான தெவரப்பெருமவுக்கு இத்தகைய தொடர் தொல்லைகள் கொடுக்கப்படுவதை கண்டித்து அவரது சக வேட்பாளராக களுத்துறை மாவட்டத்தில் ஐ.தே.க வில் போட்டியிடும் சண்.பிரபா விடுத்திருக்கும் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பொலிஸார் தனக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாகவும் இதனால் தனது மனைவிஇ பிள்ளைகள் தொடச்சியாக மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் தன்னை அரசியல் ரீதியாக பலிவாங்குவதற்கே இவ்வாறான தொல்லைகள் கொடுக்கப்படுவதாக கூறி அரசியலில் இருந்து விலகிக் கொள்ளும் அறிவிப்பை விடுத்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில்இ பாலித்த தெவரப்பெரும அம்மாவட்ட மக்களுக்கு இனஇ மதஇ ஜாதி பேதமின்றி சுயநலமற்ற சேவைகளை வழங்கி வருபவர். இவ்வாறான ஒரு மக்கள் சேவகளுன்கு துன்புறுத்தல் , தொல்லைகள் இடம்பெறுவதை அவரது சக வேட்பாளராக வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு நல்ல மக்கள் சேவகனுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதுடன் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் சட்ட முதுமாணியான வேட்பாளர் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.