தரம் உயர்வு : மூதூர் சிஹான், இலங்கை நடுவர் குழாமிற்கு நேரடியாக தெரிவுசெய்யப்பட்டார்.



ஹஸ்பர் ஏ ஹலீம்-
லங்கை கிரிகட் சபையின் நடுவர்களுக்கான விரைவு தரமுயர்வு (Fast Track Promotion) பரீட்சை
மற்றும் நேர்முகத்தேர்வு கடந்த 2019 இறுதிப்பகுதியில் இலங்கை கிரிகட் சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
சென்ற வருட இறுதியில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற பதவி உயர்வு பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் நடுவர் குழாம் ஐந்திலிருந்து நான்கிற்கு 60 பேர் கொண்ட நடுவர் குழாமிற்கு மூதூர் சிஹான் நேரடியாக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் கிரிகட் வரலாற்றிலே இலங்கை கிரிகட் நடுவர் குழாம் நான்கிற்கு தெரிவாகிய முதலாவது நடுவராக சிஹான் தடம் பதித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2020-07-09 ம் திகதி ஆர் பிரேமதாச (கெத்தாராம) சர்வதேச மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இவருக்கான பதிவி உயர்வு இலங்கை கிரிக்கட் சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

யுபுனு சுஹூத் முஹமட் சிஹான் ஆகிய இவர் திருகோணமலை வெஸ்டர்ன் வோறியஸ் விளையாட்டு கழகத்தின் தலைவரும், மூதூர் மத்திய கல்லூரியின் கிரிகட் பயிற்றுவிப்பாளரும், திருகோணமலை ரத்னஜோதி வித்தியார்த்தன பாடசாலையின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரும் ஆவார். இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டின் இலங்கை கிரிகட் நடுவர் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் ஆங்கில மொழி மூலம் சிறப்பான சித்திபெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -