தேர்தலில் வெற்றி பெற்று சிறிகொத்தவை கைப்பற்றுவோம் - நீர்கொழும்பில் சஜித்


ரிஹ்மி ஹக்கீம்-
திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றுவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) நீர்கொழும்பில் நடைபெற்ற கட்சியின் பிராந்திய காரியாலய திறப்பு நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
“தவறான நிர்வாகம் காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் லீசிங் கம்பனிகள் வாகனங்களை கடத்துகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை.
அரசாங்கம் மாபியாக்களுக்கு அடிப்பணித்துள்ளது. டின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அறிவித்த கட்டுப்பாட்டு விலைக்கு என்ன ஆனது?"
"இதனிடையே தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் என்ற விலையை தீர்மானித்துள்ளது.
எனினும், ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் எமது ஆட்சியின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான காவிந்த ஜயவர்தன, ரஞ்சன் ராமநாயக்க, ஹர்சண ராஜகருணா, சீராஸ் மொஹமட், சசி குமார், சரணலால், விஜிதமுனி சொய்ஸா மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -