புனித ஹஜ் கடமை நிமித்தம், சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளுர் யாத்திரீகர்கள் மாத்திரமே இம்முறை ஹஜ் கடமைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரை முற்றாக தடைசெய்யப்படுவதற்கான சந்’தர்ப்பங்கள் காணப்பட்ட நிலையில் சவுதி அரேபிய அரசாங்கம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
