திருகோணமலை தம்பலகாமம் 99ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.


எப்.முபாரக் -
திருகோணமலை தம்பலகாமம் 99ஆம் கட்டை சந்தியில் இன்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளாரென தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு உயிரிழந்தவர் சம்பூர் கடற்படை முகாமில் படை வீரராகப் பணிபுரியும் விக்கிரம திலக (வயது-31) என்பவராவர்.

இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரத்தில் நேருக்கு நேர் மோதிண்டதில் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நாளைய தினம்(1) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதோடு தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -