றிஸ்கான் முகம்மட்-
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகனின், ஆயிரம் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக பல மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், மொரட்டுவ பகுதியில் கல்வி பயிலும் பல மாணவ, மாணவிகளுக்கும் அண்மையில் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
கலாநிதி வி.ஜனகனின் ஏற்பாட்டில் மொரட்டுவை உயன வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ விசுதாராமய விகாரையில் நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில், லுனாவ- உயன பகுதியைச் சேர்ந்த பல மாணவர்களும் பயனடைந்தனர்.
அத்துடன் கடந்த காலங்களில் கொவிட் -19 ஆல் ஏற்பட்ட நிர்வாக முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு கலாநிதி வி.ஜனகனின் ஜனனம் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் கலாநிதி வி.ஜனகனின் செயற்றிட்டங்களின் அடிப்படையில் இலவச இணைய வசதியுடனான கற்கை நெறிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியாக உள்ள பல மாணவர்கள் நன்மை பெறும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
www.uni.vj.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது இலவச கணினி கற்கை நெறிகளுக்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனிடையே, அனைத்து சமய அறநெறிப் பாடங்களையும் இலவச இணைய வசதிகளுடன் முன்னெடுக்கும் வசதியும் கலாநிதி வி.ஜனகனின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.