சட்டவிரோதமாக இறைச்சிக்காக மூன்று மாடுகளை லொறியொன்றில் ஏற்றிச்சென்ற இருவர் கைது


க.கிஷாந்தன்
னுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இறைச்சிக்காக மூன்று மாடுகளை லொறியொன்றில் ஏற்றிச்சென்ற இருவர் நுவரெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகலை மற்றும் நானுஓயா பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே சோதனை நடத்தப்பட்டு, இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த மாடுகளை ராகலையில் இருந்து தலவாக்கலைக்கு எடுத்துச்சென்று, அங்கு வெட்டி விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நுவரெலியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -