ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யூத் போர இளைஞர்களுக்கான அடையாள அட்டை


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக தற்போதைய ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யூத் போரம் அமைப்பில் இணைந்து கொள்வதற்கான சிறந்த சந்தர்பம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யூத் போரம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கும் நிகழ்வில் இளைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக தற்போதைய ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யூத் போரம் அமைப்பில் இணைந்து கொண்டு உங்களது கல்வி,விளையாட்டுத்துறை,சமூக சேவை, தனியார் மற்றும் அரசாங்க தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தலுக்கான வழிகாட்டல்,ஏனைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக முழு அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் இந்த வேலைத்திட்டத்தில் நீங்களும் உங்களது நண்பர்களும் இதனூடாக பயணம் செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம் மட்டுமன்றி உங்களது உறவினர்கள் உங்களது விளையாட்டு கழகங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உங்களது இளைஞர் கழங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் அனைவரையும் இதில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நீங்களும் பயனடைந்து உங்களது நண்பர்களும் பயனடையுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொது ஜன பெரமுன இளைஞர் மன்றத்தில் அங்கத்துவம் பெறுவதன் மூலமாக நீங்கள் அங்கத்துவ அடையாள அட்டையை பெற்றுக் கொள்வீர்கள்.அந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் இளைஞர்களுக்காக கொடுக்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ள தகுதியடைவீரகள்.பல்வேறுபட்ட வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெறும் அதேவேளையில் இந்த அங்கத்துவ அடையாள அட்டையை பயன்படுத்தி நீங்கள் உங்களது பிரச்சினைகளை உங்களது சமூகத்தின் பிரச்சினைகளை நேரடியாக அரசாங்கத்தின் உயர் தரப்பினரிடம் உரையாடுவதற்கான பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -