சவால் நிறைந்த உலகை வெற்றிகொள்ள முழுமையான "தீன்"தாரிகளாக மாற அனைவரும் உறுதி பூணுவோம்..!!
ல்ல இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவுமே இல்லை அவன் விதித்த நியதிகளின் படியே நாம் இயங்குகிறோம் என்பது எமது வாழ்க்கையின் அடிப்படை தத்துவமாகும். சோதனைகள் நிறைந்ததே எமது வாழ்க்கை அந்த வகையில் இன்றைய சவால் நிறைந்த உலகை வெற்றிகொள்ள முழுமையான "தீன்"தாரிகளாக மாற நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.

புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்து செய்தியிலேயே முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் இஸ்லாமிய அடிப்படையில் இஸ்லாத்தை வாழ வைப்பதற்காக வாழுதலாகும்.

அந்த வகையில் நம்மை மாற்று சமூகத்தவர்கள் எதிரியாக நோக்கினாலும் நாம் நற்பண்புகளோடு உறவாடுதலே நமது மார்க்கத்தை அவர்களிடம் கொண்டு செல்ல வழிவகுக்கும்.

இஸ்லாத்தின் வளர்ச்சி, பண்பாட்டின் வளர்ச்சியும் எடுத்துக் காட்டுகளுமே அன்றி வெறும் மார்க்க கடமைகள் மாத்திரம் அல்ல.

பல்லின சமூகத்தின் மத்தியில் நமது உயர் தரமான பண்புகளை வெளிப்படுத்துகிற போது புனித இஸ்லாத்தை இலகுவாக கொண்டு செல்ல முடியும்.
எனவே நமது நற்பண்புகளை வெளிபடுத்துவதனுடாக இனபேதம் கடந்து ஒற்றுமையாக பயணிக்க முயற்சிப்போமென தாழ்மையாக வேண்டுகிறேன்.
குறைந்தபட்சம் முஸ்லிம் சமூகத்தை அவர்களின் எதிரிகளாக, குற்றவாளிகளாக, நேர்மையற்றவர்களாக பார்ப்பதில் இருந்து விடுபடுவோம். பாமர அப்பாவி மாற்று மத மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள இனவாத தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம்.


மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -