முஸ்லிம்களை பிளவுபடுத்திய யூதர்களின் தந்திரோபாயமும், அரசியலுக்கான துரும்பாக சீயாவும், சுன்னாவும்.


பதினைந்தாவது தொடர்....................

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

துருக்கி தலைமையிலான இஸ்லாமிய சாம்ராஜ்யமானது மதப்பிரிவினைகளோ, தேசியவாதமோ இல்லாமல் முஸ்லிம்கள் என்ற ஒரே அடையாளத்துடன் பல நூற்றாண்டுகள் ஒற்றுமையாக பயணித்தது.

இந்த ஒற்றுமையை சிதைவடயச்செய்து முஸ்லிம்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தினால் மட்டுமே பலமான நிலையில் இருக்கின்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அழிக்க முடியும் என்று யூதர்கள் சிந்தித்தார்கள்.

யூதர்களின் இந்த சிந்தனையை பிரித்தானியாவின் உதவியுடன் நடைமுறைப்படுத்தினார்கள். அதற்காகவே அரேபியர்கள் மத்தியில் தேசியவாதம் விதைக்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் இல்லாமலிருந்த அரேபியர்கள், அரேபியல்லாத துருக்கிக்கு எதிராக போர் செய்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை பிளவுபடுத்தினார்கள்.
இந்த பிளவுகளினால் யூதர்கள் உட்சாகமடைந்தார்கள். தங்களது திட்டம் வெற்றியடைந்ததனால் அதேபோன்று இன்னும் பலபிரிவுகளை முஸ்லிம்களுக்குள் ஏற்படுத்தி அவர்களுக்குள் நிரந்தர பகையினை உண்டுபண்ணும் நோக்கில் அடுத்தகட்ட நகர்வு நோக்கி சிந்தித்தார்கள். அதன் வெளிப்பாடுதான் மதப்பிரிவினையாகும்.
இஸ்லாமிய மதத்தை விளங்கிக்கொள்வதில் காணப்படுகின்ற மதப்பிரிவினை என்னும் கொள்கை முரண்பாடுகள் மூலம் முஸ்லிம்களுக்குள் தீராப்பகையை உண்டுபண்ணலாம் என்று யூதர்கள் நம்பினார்கள்.
அதற்காக கையிலெடுத்த மந்திரம்தான் “சீயா” “சுன்னா” என்னும் பிரிவினையாகும். சீயா பிரிவுக்குள் மட்டுமல்ல, சுன்னிப்பிரிவில் உள்ள சிலரிடமும் வழிகேடுகள் காணப்படுகின்றன. ஆனால் அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியாது. அதற்கு தீர்ப்பு வழங்குபவன் இறைவன் மட்டுமே. நாங்கள் தீர்ப்பு வழங்க முற்படும்போதுதான் பிரச்சினைகளும், பிளவுகளும் அதிகரிக்கிறது.
ஈரானில் சீயாக்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். ஈரானை ஷா மன்னர் ஆட்சி செய்தபோது அது அமெரிக்காவுக்கு கைபொம்மையாக மதச்சார்பற்ற நாடாக இருந்தது. அப்போது சவூதி அரேபியா உற்பட அரபு நாடுகள் ஈரானுடன் நெருங்கிய நற்புடன் இருந்தது. சவூதி அரேபியாவுக்கோ, ஏனைய அரபு நாடுகளுக்கோ ஈரான் சீயாவாக தெரியவுமில்லை, எந்தவித மதப்பிரச்சினைகளும் இருக்கவுமில்லை.
ஆனால் 1979 இல் ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு அமெரிக்காவின் கைக்கூலியாகவும், சவூதி அரேபியாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்த மன்னர் ஷாவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்களின் தலைமையில் “இஸ்லாமிய குடியரசு” என ஈரான் தன்னை பிரகடனப்படுத்தியது.
அத்துடன் ஷா மன்னர் ஆட்சியின்போது ஈரானில் நிறுவப்பட்டிருந்த இஸ்ரேலிய தூதரகம் புரட்சியாளர்களால் மூடப்பட்டு அங்கிருந்த தூதரக அதிகாரிகளான யூதர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டார்கள். பின்பு அந்த இடம் பாலஸ்தீன தூதரகமாக மாற்றப்பட்டது.
அத்துடன் பைத்துல் முகத்தசை (மஸ்ஜிதுல் அக்ஸா) யூதர்களிடமிருந்து விடுவிக்கும் முக்கியத்துவத்தினை உலக முஸ்லிம்களுக்கு உணர்த்தும் விதமாக ஒவ்வொரு புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளும் “சர்வதேச குத்ஸ்” தினமாக ஈரானால் பிரகடம் செய்யப்பட்டது.
ஈரான் இஸ்லாமிய புரட்சியை சீயா, சுன்னி வேறுபாடுகளின்றி அப்போது உலகம் வரவேற்றது. குறிப்பாக சவூதி அரேபியா போன்ற சுன்னிப்பிரிவினர் அதிகமாக வாழும் அரபு நாட்டிலேயே ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.
உலக முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆதரவானது மத்தியகிழக்கு நாடுகளில் ஈரானுக்கு வல்லரசு என்ற அந்தஸ்து கிடைத்தது. இது அரபு நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியதுடன் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் ஆத்திரத்தை உண்டுபண்ணியது.
இதற்காகவே மத்தியகிழக்கில் பெரும்பான்மையாக வாழ்கின்ற சீயா கொள்கையல்லாத முஸ்லிம்களின் ஆதரவை திரட்டுவதுடன், ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் ஈரான் ஒரு சீயா கொள்கையை பின்பற்றுகின்ற வழிகேட்டில் இருக்கின்ற நாடாக அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது.
இங்கே கேள்வி என்னவென்றால், மன்னர் ஷா ஆட்சி செய்தபோது அரபுலகமும், அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு ஏன் சீயா பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள் ? மன்னர் ஷாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான் சீயாவாக தெரியவில்லையா ?
இங்கே உண்மையில் சீயா பிரிவா அல்லது சுன்னி பிரிவா என்பதல்ல பிரச்சினை. அரசியல்தான் இங்குள்ள பிரச்சினையாகும். அதாவது மத்தியகிழக்கில் தானே வல்லரசாக இருக்க வேண்டுமென்று சவூதி அரேபியா விரும்புகிறது.
ஆனால் இந்த இரு பிரிவினர்களுக்குமிடையில் தொடர்ந்து முருகல்நிலையை பேணவேண்டும் என்பதில் யூதர்களும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளார்கள்.
அரபு நாடுகள் போன்று அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் தலைசாய்க்கின்ற நிலைப்பாட்டில் ஈரான் இஸ்லாமிய புரட்சியாளர்கள் இருக்கவில்லை. அவர்கள் பாலஸ்தீன பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கியதுடன், மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்கான முன்நகர்வுகளை மேற்கொண்டார்கள்.
ஆயத்துல்லாஹ் கொமைனியின் தலைமையிலான ஈரானின் இந்த நடவடிக்கை இஸ்ரேலை ஆத்திரமூட்டச்செய்தது. அதனால் அமெரிக்கா மூலமாக யூதர்கள் பல திட்டங்களை வகுத்து ஈரானின் இஸ்லாமிய ஆட்சியாளர்களை அழிப்பதற்கான நகர்வுகளை மேற்கொண்டதுடன், மீண்டும் ஈரானில் மன்னராட்சியை கொண்டுவர முயற்சித்தார்கள்.

தொடரும்......................................
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -