சுகாதார விதிமுறைகளை மீறிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
கொவிட் 19 சுகாதார ஆலோனையை மீறி உணவு பரிமாறிய ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு அட்டன் பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,
கொவிட் 19 தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதார பிரிவினரின் நிபந்தனைகள் அடிப்படையில் ஹோட்டல்களை திறக்க அனுமதிக்கப்பட்டது, அந்த வகையில், ஹோட்டல்களில் உணவு பரிமாற முடியொதென்றும் பொதி செய்து விற்பனை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது ,

இதனையடுத்து 16/05 அன்று அட்டன் பொலிஸாரும் ,சுகாதார பிரிவினரும் , ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களுக்கு சென்று பார்வையிட்டனர்,
இதன் போது சில ஹோட்டல் உரிமையாளர்கள் நிபந்தனையை மீறி ஹோட்டல்களின் மேல் மாடியில் உணவு பரிமாறியதை அவதானித்ததைடுத்து அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் தொடர்ந்து இவ்வாறு செயற்பட்டால் கொவிட் 19 சுகாதார நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் எச்சரித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -