கொரோனா (கொவிட்19) பரவுவதை கட்டுப் படுத்தும் நோக்கில் இன்று (20) முதல் பெரு நாள் முடியும் வரை கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை எல்லைக்குட் பட்ட பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களை மூடுமாறு கிண்ணியா பிரதேச பொது அமைப்புகள் தெரிவித்துள்ளது.
கிண்ணியா உலமா சபை,உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகம்,சுகாதார வைத்தியதிகாரிகள், சூரா சபை,பள்ளி வாசல் சம்மேளனம் ஆகிய பொது அமைப்புகள் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
பெருநாள் நெருங்கும் நேரத்தில் புடவை கடைகள் மற்றும் ஏனைய கடைகளில் சன நெருசலில் சமான்களை மக்கள் கொள்வனவு செய்கின்றனர்.மேலும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு தேடும் நோக்கத்தில் கடைகளை மூட தீர்மானம் எடுத்ததாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர்.
இத் தீர்மானத்திற்கு கட்டுப் பட்டு நடப்பது கிண்ணியா பிரதேசத்தில் இருக்கும் ஒவ்வொரு வர்த்தக உரிமையாளர்களின் தார்மீக பொறுப்பாகும்.
இக்காலப் பகுதியில் சுகாதார நடை முறைகளை கடைப்பிடித்து பேணுமாறும் இவ்வமைப்பினர் வர்த்தக உரிமையாளர்ளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
