அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவையொட்டி மலையகம் முழுவதும் நாளைய தினம்
துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பெரியசாமி பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலையகத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் புதிய ஒளி
விளக்கை உருவாக்கிய தலைமைத்துவம் என்ற வரிசையில்
தொண்டைமான் உடைய வாரிசு ஏதேனும் ஒரு வகையில் மலையக மக்களின் விடிவுக்காக குரல் கொடுத்த ஒரு யுகமாக செயற்பட்டமை மக்கள் மத்தியில் என்றுமே அழியாத ஒரு சொத்தாக இடம்பிடித்துள்ளது. அந்த வகையில்
எதார்த்தமாக மலையக மக்களுடைய அன்றாட
செயற்பாடுகள் தொடர்பில் எதிரொலித்த ஒரு குரல் இன்று
முடங்கிப்போய் உள்ளமை அனைத்து மலையக மக்கள் மத்தியிலும் வேதனை அளிக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள்
மரித்தாலும் கூட அவருடைய செயற்பாடுகளும் நினைவுகளும் மலையக மக்கள் மத்தியில் என்றும் ஒரு மாறாத உயிராக வாழ்ந்துகொண்டிருக்கின்றமை.. நினைவுகூறத்தக்கது. எனவே நாளைய தினத்தை மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்கள் துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு ..ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பெரியசாமி பிரதீபன் மேலும் தெரிவித்துள்ளார்.
