கையில் தொடாமல் கைகழுவும் கருவி மலையகத்தில் கண்டுபிடிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கொவிட் 19 வைரஸ் பரவலினை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதில் ஒன்றாக தனிமை படுத்தல் சட்டத்தினை கொண்டு வந்து ஊரடங்கு சட்டத்தினை அமுல் படுத்தியது. இந்த ஊரடங்கு காலப்பகுதியினை பல்வேறு நபர்கள் பயனுள்ள விடயங்களை செய்து கொண்டதனை நாம் ஊடகங்கள் ஊடாக அறிந்து கொண்டோம்.
அவ்வாறு தற்காலத்திற்கு தேவையான கையில் தொடாமல் கைகழுவும் கருவி ஒன்றினை ஊரடங்கு சட்ட காலப்பகுதியினை பயன்படுத்தி வீட்டுக்கு நாட்டுக்கும் பயன்படக்கூடியவாறு நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்,கோபிநாத் வயது (52) குறைந்த செலவில் கண்டுபிடித்துள்ளார்.
சென்சர் மூலம் தன்னியக்கமாக இயங்கும் குறித்த கருவியின் மூலம் கையில் தொடமல் கைக்கு சவர்காரமிட்டு கையினை கழுவி கொள்ளலாம்.
இந்த கருவி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கருவியினை பயன்படுத்துவதன் மூலம் நீர் மற்றும் சவக்கார கரைசல் வீண் விரையமாவது தடுக்கப்பட்டுள்ளன.
52 வயதான ஆர்.கோபிநாத் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொலைகாட்சி மற்றும் வானொலி பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுப்பட்டுள்ளார்.
சிறிய வயது முதல் புதிய புதிய நவீன தொழிநுட்பம் கையாண்டு புதிய வகையான கண்டு பிடிப்புக்களை கண்டு பிடிப்பது இவரது ஆசையாகும்.எனினும் எவரும் அதை பற்றி கண்டு கொள்ளததனால் அவரது திறமையும் மறைந்து போய் உள்ளன. பழுபார்க்கு தொழிலில் ஈடுபட ஆசைப்பட்டு க.பொத. சாதாரண தரத்துடன் கல்வியினை தொடராமல் இடையில் கைவிட்டுவிட்டு பழுதுபார்க்கும் நிலையத்தில் சேர்ந்துள்ளார். குறித்த கருவியினை அரசாங்கமோ அல்லது நிறுவனமோ உதவி செய்தால் கை அடக்கமான வகையில் சூரிய ஒளியிலும் குறைந்த மினசாரத்திலும் இயங்கும் வகையில் தேவை ஏற்படும் போது பயன்படும் வகையில் உருவாக்க முடியும் எனவும் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இதனை எமது நாட்டுக்கு பயன்தரும் வகையில் பாடசாலைகள்,பொது இடங்கள்,ஆகியவற்றில் பயனுடைய வகையில் பொறுத்துவதற்கு ஏற்றவாறு உருவாக்க முடியும் எனவும் இதன் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கவும் முடியும் எனவும் அவர் தெரவித்தார்.
தற்போது உள்ள பொருளாதார வசதியில் தனக்கு விலை கூடிய பொருட்கள் உபயோகிக்க முடியாததன் காரணமாக முடிந்தளவு பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டு தயாரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கருவியினை 6000 செலவில் கைகடக்கமான முறையில் தன்னால் உருவாக்க முடியுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இது இதனை பயன்படுத்தும் மற்றும் சிலர் கருத்து தெரிவிக்கையில் உண்மையிலேயே காலத்திற்கேற்ற வகையில்; இதனை உருவாககியுள்ளார்.இதன் மூலம் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்தோடு வீண் விரயங்கள் இன்றி தற்காலத்pற்கு அவசியமானதாக உள்ளதனால் இதனை உருவாக்கிய இவரை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -