முஸ்லிம் சமுகம் இன்னும் மிக அவதானமாக இருக்க வேண்டும்.-சுலைமான் தாஜூதீன்


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முஸ்லிம் சமுகம் இன்னும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என மன்னார் மாவட்டத்தின் மூத்த வர்த்தக பிரமுகரும் முன்னால் கப்பல்துறை சேவைகள் சங்கத்தின் தலைவருமான சுலைமான் தாஜூதீன் தெரிவிக்கின்றார்.
தற்போது உலகையே அசச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோன வைரஸ் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலியெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொரு நாடுகளும் நோயின் கோரத்தினால் என்ன செய்வது என்று தெரியாது ஆட்டங் கண்டு கொண்டு செல்லும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் தம்மால் முடியுமானவரை அதி உயர்ந்த பட்ச சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றதை நாம் அறிவோம்.
இந்த வகையில் இலங்கை அரசாங்கமும் இது விடத்தில் முழுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக உலக நாடுகளைப் போல் மக்கள் ஒன்று கூடுவது, அருகில் இருப்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி மக்கள் வீடுகளில் இருக்கும் வகையில் கடுமையான சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தி அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கடுமையான ஊரடங்குச் சட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளது.

உண்மையில் மனிதப் பலியைக் குறைக்கும் வகையில் இலங்கை ஜனாதிபதியும், அரசாங்கமும் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் நோயின் தாக்கத்தில் இருந்து இலங்கை மக்களை ஓரளவு பாதுகாப்தற்கு முடிந்தள்ளமை வரவேற்கத்தக்கது.
இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் என்ற வகையில் முஸ்லிம் சமுகமும் இந்த நாட்டின் பங்காளிகள் என்ற வகையில் இவ்வாறான பாரிய கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் விடயத்தில் ஏனைய சமுகங்கள் போல் முஸ்லிம் சமுகமும் கடமைப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் ஒருசில இடங்களில் ஒருசில முஸ்லிம் சகோதரர்களின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் சட்டத்தையும் கட்டளைகளையும் மீறி நடந்து கொள்வது நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனக்கு ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் முஸ்லிம்கள் நாட்டுச் சட்டதை மதித்து ஏனையவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாத வகையில் அரசாங்கத்தின் சட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும். ஒருசில முஸ்லிம் நபர்களால் இந்த நாட்டில் உள்ள முழு முஸ்லிம் சமுகத்தினதும் நற்பெயருக்கும்இ நன்மதிப்புக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதுடன் அவர்கள் முஸ்லிம் சமுகத்தை குறைகூறி வெறுப்பதற்கு வழிவகுக்கின்றது என மன்னார் மாவட்டத்தின் மூத்த வர்த்தக பிரமுகரும் கப்பல்துறை சேவைகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுலைமான் தாஜூதீன் தெரிவக்கின்றார்.
நேற்றும்கூட மன்னார் கரைசல் கிராமத்தில் ஒருசில இளைஞர்கள் நடந்து கொண்ட விதம் பாரிய கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது. உண்மையில் இவ்வாறான விடயங்கள் நாட்டின் சட்டத்தை அவமதிக்கும் செயற்பாடுகளாகவே அமைகின்றது. இஸ்லாம் மற்றவர்களுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்குவதுடன்இ மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தல்இ நாட்டுத் தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் கட்டுப்படுத்தல் போன்ற நற்பண்புகளை வழியுறுத்தியுள்ள மார்க்கமாகும் என்பதனைக் கவனத்திற் கொண்டு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த வகையில் தற்போதைய நாட்டின் அவசர நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமுகம் நிதானமாகவும் புத்தி சாதுர்யத்துடனும் ஏனையவர்களின் நல்ல பண்புகளை ஏற்றவர்களாகவும் கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்தத் தேiவாயன முழு ஒத்துழைப்புக்களையும் அரசாங்கத்திற்கு வழங்கி முஸ்லிம் சமுகத்தின் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும் எனவும் சுலைமான் தாஜூதீன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -