மாறாக கிழக்கில் முஸ்லிம்களை புலிகளின் அடிமைகளாக்க மு. கா துணை போனது. அரச இராணுவம், பொலிஸ், நீதவான் பார்த்திருக்க முஸ்லிம்களின் இரண்டு ஜனாசாக்கள் எரிக்கப்பட்டன.
அந்நாளில் முஸ்லிம்களுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரேயொரு கட்சிதான் இருந்தது. அதுதான் மு.காவும் அதன் பிள்ளையான நுஆவும்.
அப்படியிருந்தும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பாக கலந்து கொள்ளும் சாதாரண உரிமையை கூட ரவூப் ஹக்கீமால் பெற முடியவில்லை. வடக்கு மாகாண முஸ்லிம்களை நஷ்ட ஈட்டுடன் மீள் குடியேற்ற முடியவில்லை. கிழக்கில் முஸ்லிம்களின் பறிபோன காணிகளை மீட்டெடுக்க முடியவில்லை.
அந்த நேரத்தில் ஹக்கீம் துறைமுக அமைச்சராக இருந்தார்? கிழக்கு முஸ்லிம்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கவில்லை. முஸ்லிம் சமய விவகார அமைச்சராக இருந்தார். அதன் மூலம் பாரிய சேவைகள் செய்திருக்க முடியும். குரங்கின் கையில் பூமாலை ஆகியது.
அப்படியிருந்தும் நாம் கல்முனை ஹாமியா அரபுக்கல்லூரியில் நாம் ஹக்கீமுக்கு பாரிய வரவேற்பளித்து அதில் 92ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் மௌலவி ஆசிரிய நியமனத்தை வழங்க ஏற்பாடு செய்யும் படி சொன்னோம். இதோ கொழும்பு போனவுடன் செய்கிறேன் என்றார். பின்னர் அடுத்த தேர்தலுக்குத்தான் கிழக்குக்கு வந்தார். கிழக்கு முஸ்லிம்களின் மொத்த வாக்குகளையும் பெற்று அவர்களை முழு முட்டாளாக்கிய ஈவிரக்கமற்ற ஒரேயொரு போக்கிரித்தலைவராக ஹக்கீம் இருந்தார்.
கிழக்கு முஸ்லிம்கள் எத்தனை எதிர்பார்ப்புடன் இந்தக்கட்சியை வளர்த்தெடுத்தார்கள் தெரியுமா? எத்தனை உயிர்களை காவு கொடுத்தார்கள் தெரியுமா? ஹக்கீமும் அவர் கட்சியில் கூலிக்கு மாரடித்த கிழக்கு பிரதிநிதிகளும் அப்பட்டமாக மொத்த முஸ்லிம்களையும் விற்று திண்றார்கள்.
முஸ்லிம்கள் அரசியலில் இனியும் முஸ்லிம் காங்கிரசில் ஒற்றுமைப்பட முடியாது. அந்தக்கட்சி என்பது தலை முதல் வால்வரை சுய நலன் கொண்டது மட்டுமன்றி முஸ்லிம்களின் பெறுமதி மிக்க வாக்குகளை மதுவுக்கும் மாதுவுக்கும் பணத்துக்கும் பதவிக்கும் விற்கும் கட்சியாக மாறி விட்டது.
இன்றுள்ள நிலையில் அரசியல் அறிவுள்ள உலமாக்கள் தலைமையில் ஜனநாயக அரசியலில் முஸ்லிம்கள் ஒன்று பட முன் வர வேண்டும்.
பாட்டுக்கும், கூத்துக்கும், பணத்துக்கும், உணர்வுக்கும் நமது மக்கள் அடிமைப்பட்டது போதும். உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளிப்போம்.
