சம்மாந்துறையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட துஆப் பிரார்த்தனை

எம்.எம்.ஜபீர்-
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட துஆப் பிரார்த்தனை சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இன்று காலை இடம்பெற்றது.
இவ் துஆப் பிரார்த்தனையை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லீஸ் அஸ்ஸூரா சபை ஆகிய முற்சபைகள் இணைந்து ஏற்பாடு செய்தனர். துஆப் பிரார்த்தனையினை மௌலவி மஹ்ரூப், மௌலவி பசீல் ஆகியோர்கள் நிகழ்த்தினர்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பொலிஸ் உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லீஸ் அஸ்ஸூரா சபை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இணைந்துகொண்டனர்.




;
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -