கிழக்கு நற்புறவு ஒன்றியத்தினால் தெளிகருவிகள் மற்றும் கை ஒலிபெருக்கி ஆகியன வழங்கி வைக்கும் நிகழ்வு


அஸ்ஹர் இப்றாஹிம்-

கிழக்கு நற்புறவு ஒன்றியத்தினால் ( EFO) கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் தெளிகருவிகள் மற்றும் கை ஒலிபெருக்கி ஆகியனவற்றை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் யு.கே.எம்.முஸாஜித் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் , ஒன்றியத்தின் நிர்வாக பணிப்பாளர் யு.எல்.எம்.பைஸர் , ஒன்றியத்தின் நிதிப் பணிப்பாளர் ஏ.பி.ஜிப்ரி , கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் , கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வாத் , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் முஹம்மட் றிஸ்னின் , ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் பணிமனையின் உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -