சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு; சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக எதிர்வரும் 7ம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது என சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்துள்ளார்.

இதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான வேலையிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 1,049 பேருக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமூக இடைவெளியை மீறுவோர் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது S$10,000 அபராதம் விதிக்கப்படும் என முன்னர் பொதுமக்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -