விகாரி வருஷம் பங்குனி மாதம் 31-ம் திகதி (13-04-2020) திங்கட்கிழமை இரவு உதயாதி நாழிகை 35.52; இல் (இரவு 08.23 மணிக்கு) ஷஷசார்வரி' என்னும் பெயருடைய புதுவருஷம் பிறக்கின்றது. அன்று நட்சத்திரம் பூராடம்; 1ம் பாதம், திதி அமரபக்க ஸப்தமி. அன்று மாலை நாழிகை 25.52 (மாலை 04.23 மணி) முதல் நள்ளிரவு நாழிகை 45.52 (இரவு 12.23 மணி) வரையும் மேட சங்கிரமண புண்ணியகாலம் ஆகும். புதுவருஷம் பிறக்கும் போது உதயலக்கினம் ஷஷவிருச்சிகம்;' ஆகும்.
இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்து நீர் வைத்து தலையில் விளாவிலையும் காலில் கடம்பமிலையும்,வைத்து ஸ்நானஞ்செய்து, வெண்ணிறப்;பட்டாயினும் அல்லது வெள்ளைப்புது வஸ்திரமாயினுந் தரித்து, முத்து சேர்த்து இழைக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து, நித்திய கர்மானுஷ்டானம் முடித்து கண்ணாடி, தீபம், பூரணகும்பம், முதலான மங்கலப் பொருட்களைத் தரித்து, விநாயகர் முதலிய இஷ்டகுல தெய்வங்களைத் தரிசனம் செய்து குரு, பெற்றோர் முதலிய பெரியோர்களை வணங்கி, அவர்கள் ஆசிபெற்று, மோதகம், வேப்பம்பூ, வடை முதலியவற்றுடன் அறுசுவைப் பதார்த்தங்களையும் போஜனஞ் செய்து, புதுப்பஞ்சாங்க பலன்களைக் கேட்டு சயனிப்பார்களாக.
மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து ஸ்நானம் நித்திய கர்மானுஷ்டானம் முடித்து கண்ணாடி, தீபம், பூரணகும்பம், முதலான மங்கலப் பொருட்களைத் தரித்து, செய்து புதுவருட சூரியனுக்கு பொங்கல், பூசை செய்து, இயன்ற தானாதிகள் வழங்கி, குரு, பெற்றோர் முதலிய பெரியோர்களை வணங்கி, அவர்கள் ஆசிபெற்று, பிதிர் விரதானுசாரிகள் சிரார்த்தம், தர்ப்பணம் என்பன செய்து, நண்பர்கள், விருந்தினர்களை உபசரித்து, சுற்றத்தினருடன் இருந்து முன்போல் போஜனஞ் செய்து, தாம்பூலமருந்தி, சுகந்த சந்தன புஸ்பாதகளையணிந்து, புதுவருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச் சிந்தித்து மங்களகரமாக வாழ்வார்களாக.
சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்: பரணி, கார்த்திகை 2,3,4 ஆம்பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம்பாதங்கள், பூரம், மூலம், பூராடம், உத்தராடம் 1ம்பாதம் ஆகியன.
புதுவருடப்பிறப்பு : 13-04-2020 திங்கட்கிழமை இரவு மணி 8.23
மறுநாள் அதிகாலை பொங்கல்
புண்ணியகாலம் : 13-04-2020 திங்கட்கிழமை மாலை மணி 4.23 - இரவு மணி 12.23
கைவிசேடம் : திங்கள் 13.04.2020 பின்னிரவு 5.20 _ 5.50 வரை
வியாழன் 16.04.2020 இரவு 07.00 - 08.00 வரை
வியாழன் 16.04.2020 இரவு 10.25 - 11.30 வரை
வித்தியாரம்பம் : 20.04.2020 காலை 09.15 - 09.45 வரை விருந்துண்ணல் : 20.04.2020 பகல் 09.15 - 09.45 வரை
22.04.2020 மாலை 06.00 - 07.30 வரை
பூமி பிரவேசம் : 16.04.2020 இரவு 07.00 -08.00 வரை ஏர்மங்கலம்: 20.04.2020 காலை 09.05 - 09.35 வரை
18.04.2020 பகல் 09.15 -09.45 வரை 29.04.2020 காலை 07.30 -08.55 வரை
இவ்வருடம் தனு, மகரம், கும்பம் ராசிகளுக்கு ஏழரைச்சனியும் மிதுனராசிக்கு அட்டமத்து சனியும் குருவும் மகரத்துக்கு ஜென்ம குருவும் சனியும் துலாம், சிங்கம் ராசிகளுக்கு சுகக்குறைவும். மேடராசிக்கு தொழில் கஸ்டமும்; மேடம், இடபம், மிதுனம், விருச்சிகம், துலாம், தனு ராசிகளுக்கு விஷபிடையும் உண்டாம்.
sathya Naarayana” Astrological Centre.
க.ரவீந்திரன்,
86, விபுலாநந்த வீதி, . காரைதீவு- 01 (கி.மா.), வு.P-:0775073347
பிரசுரம் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
