ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வு

பாறுக் ஷிஹான்-
கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அழைத்துவரப்படும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரினால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வதற்காக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) இத்தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொரோனா(கொவிட்19) தொற்று கொண்ட ஐந்து நோயாளர்களுடனும் 75 நேரடி தொடர்பு கொண்ட சந்தேகத்துக்கிடமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் பராமரிக்கப்படுகின்ற நிலைமைகளை சென்று அவதானித்துள்ளனர்.

அத்துடன் இத்தனிமைப்படுத்தல் முகாமிற்கு பொறுப்பாக உள்ள வைத்திய அதிகாரியை சந்தித்து கலந்துரையாடினர்.இதன் போது குறித்த தனிமைப்படுத்தல் முகாமை கடற்படையினருடன் இணைந்து எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பாக பலதரப்பட்ட தீர்மானங்கள் இவ்விஜயத்தின் போது எடுக்கப்பட்டதுடன் மருந்து வகைகளும் கையளிக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணனுடன் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -