5000 ரூபா கொடுப்பனவில் ஊழல் இடம்பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சதாசிவம் முறைபாடு.




ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற 5000 கொடுப்பனவு பல கிராமசேவகர்கள் மற்றும் சமூத்தி உத்தியோகஸ்த்தர்கள் மூலம் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.ஆனால; ஒரு சில இடங்களில் முறையாக இந்த நடவடிக்கைகள் நடைபெற்ற போதிலும். பல இடங்களில் இந்த கொடுப்பனவுகள் வழங்கும் போது ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இது குறித்து நான் மாவட்ட செயலாளரிடமும்இகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடமும் முறைபாடுகளை முன்வைத்துள்ளேன்.இது குறித்த ஆராய்ந்த உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இஇலங்கை ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்..
இன்று (24) திகதி நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....
குறித்த கொடுப்பனவு தொடர்பாக பொது மக்கள் மற்றும் தோட்டத்தில் உள்ள தலைவர்கள் எனக்கு தொலை பேசியூடாக தெரிவித்தார்கள். இது குறித்து நான் மாவட்டச்செயலாளர் புஸ்பகுமாரவிடம் தெரிவித்த போது அவரும் இது தொடர்பாக பல முறைபாடுகள் தனக்கும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.எனவே நான் அவரிடம் இந்த விடயம் தொடர்பாக கிராமசேவகர்களை அழைத்து பேசுமாறு வலியுறுத்தியனேன். அதை அவர் செய்வதாகவும்.இது தொடர்பாக புகார்கள் ஏதும் இருந்தால் கிராசேவகர்களுக்கு எழுத்து மூலம் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.இதே நேரம் இந்த கொடுப்பனவுகள் கிடைக்க தகுதியிருந்தும் பலருக்கு கிடைக்கவி;ல்லை. என்பதனையும் சுட்டிக்காட்டினேன்.
எனினும; இது தொடர்பாக குறித்த நபர்கள் எழுத்து மூலம் வழங்கும் பட்சத்தில் அது தொடர்பாக மீண்டும் பரிசீலிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை தோட்டப்பகுதியில் பணி புரிகின்ற கிராசேவகர்களில் அதிகமானவர்கள் மக்களின் கலை கலாசாரங்கள் பற்றி பூரணமான அறிவு மற்றும் தெளிவு இல்லாதன் காரணமாக இவ்வாறு பலரது கொடுப்பனவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
ஆகவே இந்த விடயங்கள் அறிந்தவர்கள் அங்குள்ள கிராசேவகர்கள் தான். ஆகவே அவர்களை இதனை நன்கு அறிந்து சரியாக இனங்கண்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு;ம் என்று கேட்டுக்கொண்டேன்.
இதே நேரம் இந்த கொடுப்பனவு எந்த ஒரு தொழிற்சங்கமோ அரசியல் கட்சியோ பெற்றுக்கொடுத்தல்ல. இது அரசாங்கம் பொது மக்களுக்காக பெற்றுக்கொடுக்கும் பணம் ஒரு சில அரசியல் வாதிகளின் கையாளிகள்இஇந்த பணத்தினை கொடுக்க விடாது அதிகாரிகளுக்கு அலுத்தம் கொடுப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே நான் அவர்களிடம் கேட்டுக்கொள்வது நீங்கள் அவ்வாறு செய்தால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் பெற்றுக்கொடுக்காமல் திறைசேரிக்கு சென்று விடும் ஆகவே இதனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் வழிவகுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -