இதற்கமைய இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 323 ஆகும்.
இன்றை தினம் (2020.04.22) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்ட 13நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
இவர்களுள் 11 பேர் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேருவளை பிரதேசத்தைச் சேரந்தவர்களாவர். மற்ற நோயாளி பொலனறுவை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருபவர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.
இந்த நோயாளர்களுள் 104 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிருந்து வெளியேறியுள்ளனர்.
