திருகோணமலை முள்ளிப் பொத்தானை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட மகளிர் கமக்கார அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 50 பெண் விவசாயிகளுக்கு மூன்று வகை நாற்று மரக் கன்று வழங்கும் நிகழ்வு இன்று (07) வெகு விமரிசையாக நடை பெற்றது.
இதன் போது கத்தரி, கரி கொச்சி, மிளகாய் சாடிகள் என்பன இன்று முள்ளிப்பொத்தானை 228/B விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதனால் சாலிய அருன , சதாம்நகர் பெண்கள் விவசாய சங்க அங்கத்தவர்களிடம் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளருமான பிரிவுக்கான பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தருமான எம் எஸ் அப்துல் ஹலீம் அவர்களினால் 50 பயன் பெரும் பெண்கள் விவசாய சங்க அங்கத்தவர்களிடம்
ஒப்படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.